1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (13:00 IST)

மனைவி குழந்தைகளைக் கொன்று பெட்ரோல் தொட்டிக்குள் வீசிய கணவன்

அமெரிக்காவில் நபர் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று, அவர்களை பெட்ரோல் தொட்டிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலோரடோவை சேர்ந்தவர் கிறிஸ்வாட்ஸ். இவருக்கு ‌ஷனான் வார்ஸ் என்ற மனைவியும் பெல்லா, செலஸ்ட் ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
 
பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கிறிஸ்வாட்ஸ், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
 
இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்வாட்ஸ், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்று பெட்ரோல் தொட்டிக்குள் வீசியுள்ளார். இதனையறிந்த போலீஸார் கிறிஸ்வாட்ஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.