ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (14:59 IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு..!

Hasina
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு பிரச்சனை காரணமாக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது என்பதும் இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்ததால் தனது பிரதமர் பதவியை ஹசீனா ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பியோடி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி வங்கதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதை அடுத்து வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு தப்பி சென்ற பிறகு ஹசீனாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை அவர் எதிர் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran