ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (10:58 IST)

ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தது பள்ளி தாளாளரா? - அதிர்ச்சி தகவல்!

சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளி தாளாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்த மாதம் தனது வீட்டின் முன்னரே மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் பல ரவுடிகளை போலீஸார் கைது செய்தபோது ரவுடி திருவெங்கடம் என்பவர் எண்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.

 

மேலும் விசாரணையில் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்களும் கைதாகியுள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று வந்தது. இதையடுத்து அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்தினர் வாழும் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் மர்ம கொலை மிரட்டல் கடிதம் குறித்து விசாரித்ததில் அதை செய்தது பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னதாக கடலூர் முதன்மை கல்வி அலுவலருக்கு இதே போல அருண்ராஜ் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் அவரது டிரைவர் சதீஷ் அந்த வழக்கில் சாட்சி சொன்னதால் அருண்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அதற்கு பழி வாங்குவதற்காக டிரைவர் சதீஷின் பெயரில் இந்த கடிதத்தை ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார் அருண்குமார். ஆனால் போலீஸ் விசாரணையில் உண்மை தெரியவரவே தற்போது மீண்டும் அருண்ராஜ் கைதாகியுள்ளார்.

 

Edit by Prasanth.K