வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:55 IST)

என்னுடைய ஆட்சியை கவிழ்த்தது அமெரிக்கா தான்: ஷேக் ஹசீனா திடுக் குற்றச்சாட்டு..!

Hasina
என்னுடைய ஆட்சியை கவிழ்த்தது அமெரிக்கா தான் என்றும் வங்கதேசத்தில் உள்ள மார்ட்டின் தீவுகளை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்பதால் என்னுடைய ஆட்சியை சதி செய்து அமெரிக்கா கவிழ்த்து விட்டது என்றும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் விரைவில் லண்டனில் செட்டில் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பதவி விலகிய பின் முதல் முறையாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கதேசத்தில் உள்ள மாட்டின் தீவுகளையும் வங்காள விரிகுடாவையும் அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுத்தால் தான் நான் பதவியில் நீடித்திருக்க முடியும் என்று அமெரிக்கா மிரட்டியதாகவும், ஆனால் அமெரிக்காவின் மிரட்டலுக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றும் ஒருபோதும் என்னால் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு விட்டுக்கொடுத்த முடியாது என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

 அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியாததால் தான் அமெரிக்கா சதி செய்து என்னுடைய ஆட்சியை கவிழ்த்து விட்டதாகவும் நான் பதவி நீடித்தால் மாணவர்கள் போராட்டம் மேலும் தீவிரமாகி பல உயிர்கள் இழக்கக்கூடும் என்பதால் தான் நான் ராஜினாமா செய்து விட்டேன் என்றும் அவர் கூறினார்.

மக்கள் வாக்களித்து தான் நான் வெற்றி பெற்றேன், என்னுடைய வலிமை மக்கள்தான், நான் வேண்டாம் என்று மக்களே முடிவெடுத்ததால் தான் நாட்டை விட்டு வெளியேறினேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva