1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. A man won 1.7 crore rupees in computer game

கம்ப்யூட்டரில் கேம் விளையாடி ரூ.1.7 கோடி பரிசு வென்ற இளைஞர்

கேம்
கம்ப்யூட்டரில் கால்பந்து கேம் விளையாடி இளைஞர் ஒருவர் ரூ.1.7 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.
 
பிரபல கம்யூட்டர் கேம் நிறுவனமான இஏ நிறுவனம் சமீபத்தில் பிபா கால்பந்து இ-உலகக்கோப்பை தொடரை நடத்தியது. உலகம் முழுவதும் இந்த தொடரில் சுமார் 2 கோடி பேர் கலந்து கொண்டனர். 
பல்வேறு கட்டங்களாக நடந்த இந்த போட்டியின் இறுதிச்சுற்று நேற்று லண்டனில் நடந்தது. இந்த இறுதிப்போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த எமெஸ்டாஸ்ட்ரி என்பவர் ஸ்டீபனோ என்பவரை எதிர்கொண்டார்.

 
எமெஸ்டாஸ்ட்ரி சிறப்பாக விளையாடி ஸ்டீபனோவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். அவருக்கு  2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.7 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
இரண்டு நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் - துரைமுருகன்