1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (11:06 IST)

ஜெண்டில்மேன் கேம்: ஆப்கான் வீரர்களுடன் இணைந்து கோப்பையுடன் போஸ் கொடுத்த இந்திய வீரர்கள்!

ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் காரணத்தால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அங்கிகாரத்தை ஐசிசி வழங்கியது. 
 
ஆப்கானிஸ்தான் அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில், இந்தியாவை எதிர்கொண்டது. இந்த பெங்களூரில் நடந்து முடிந்தது. இதில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. 
 
போட்டி முடிந்த உடன் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. அப்போது, சாம்பியன்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த போது, இந்திய அணியின் கேப்டன் ரகானே ஆப்கானிஸ்தான் அணியினரை அழைத்து, அவர்களுடன் இணைந்து கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 
 
போட்டி என்பதையும் தாண்டி, முதல் போட்டியை விளையாடிய ஆப்கானிஸ்தானை பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு இருந்ததாக அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.