வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 ஜூலை 2018 (16:50 IST)

கேமிங் கிளாஸ்: இது கேம்மர்களுக்கான கிளாஸ்

கண்கள் பாதிப்பு அடையாமல், சோர்வடையாமல் கேமிங் விளையாட கேமர்களுக்கு புதிதாக ப்ளூ பிளாக்கர் கிளாஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.

 
நீல ஒளி மற்ற நிற ஒளிகளை விட குறைந்த அலைநீளம் மற்றும் அதிக ஆற்றல் கொண்டது. குறிப்பாக கணினி திரை, ஸ்மார்ட்போன் திரை உள்ளிட்டவைகளில் இந்த நீல ஒளி உள்ளது.
 
இந்த நீல ஒளி புற ஊதா கதிர்களை விட அதிகளவில் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கண்கள் காணக்கூடிய ஒளியில் நீல ஒளி மிகக் குறைந்த அலைநீளம் கொண்டவையாக உள்ளதாக கண்களுக்கு நீண்ட கால பாதிப்பை உண்டாக்கும்.
 
ஒன்றைய நவீன உலகில் கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களில் பணிக்காக நேரம் செலவிடுபவர்களை விட கேமிங்கில் நேரம் செலவிடுபவர்கள்தான் அதிகம். இதனால் கேம் விளையாடுபவர்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு எளிதில் கண்கள் பாதிப்படையும்.
 
எனவே கேம் விளையாடுபவர்களுக்கென ஸ்பெஷலாக கேமிங் கிளாஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். ப்ளூ பிளாக்கர் கிளாஸ் என்ற பெயரில் ஆன்லைன் மற்றும் சந்தையில் கிடைக்கிறது. 
 
இந்த ப்ளூ பிளாக்கர் கிளாஸ் நீல ஒளியை கண்ணாடி வழியாக ஊடுருவதை தடுத்து கண்களை பாதுகாக்கிறது. இந்த கண்ணாடியை அணிந்துக்கொண்டு நீண்ட நேரம் கண்கள் சோர்வடையாமல் கேம் விளையாடலாம்.