புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (16:21 IST)

ஸ்டண்ட்மேனாக மாறி பாம்பை காலி செய்த பூனை

வீட்டில் நுழைய முயன்ற பாம்பை பூனை ஒன்று அடித்தே கொன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வியட்னாமில் பாம்பு ஒன்று ஒருவரது வீட்டினுள் நுழைய முயற்சித்திருக்கிறது. அப்போது சிங்கம்போல் அந்த வீட்டினுள் இருந்து சீறிட்டு வந்த பூனை அந்த பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது.
 
அந்த பூனையை காலி செய்ய பாம்பு எவ்வளவு முயற்சித்தும், பூனை காலாலேயே அந்த பாம்பை அடித்துக் கொன்றது. இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.