புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (16:32 IST)

தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளரை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்டுகள்: சத்தீஸ்கரில் பரபரப்பு

சத்தீஸ்கரில் செய்தி சேகரிக்க சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக சூறாவளிப் பிரச்சாரங்களை வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தேர்தல் சம்மந்தமாக செய்தி சேகரிக்க சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹு உள்ளிட்ட இரு காவலர்களை மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். போலீஸார் மாவோயிஸ்டுகளை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.