திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (07:55 IST)

போலீஸ் அதிகாரியை கொன்று சமைத்து சாப்பிட்ட நபர்கள்

உக்ரைனில் போலீஸ் அதிகாரியை இருவர் கொன்று சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உக்ரைனில் போலீஸ் அதிகாரி ஒருவர் சில நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தார் போலீஸில் புகார் அளித்திருந்த நிலையில் போலீஸார் பல்வேறு குழுக்களாக பிரிந்து காணாமல் போன போலீஸ் அதிகாரியை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில் குப்பைகளுக்கு நடுவே அவரது உடல் மீட்கப்பட்டது. அவரது உடலில் பல்வேறு பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதைக்  கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். 
 
சந்தேகத்தின்பேரில் ஒரு தந்தையையும் மகனையும் பிடித்து விசாரித்ததில் பல்வேறு உண்மைகள் அம்பலமாகின. அதில் அவர்கள் இருவரும் தான் அந்த போலீஸார்காரரை கொன்றதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவரது உடல்பாகங்களை வெட்டி எடுத்து சமைத்து சாப்பிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இச்சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.