பிட்ஸ்பர்க் துப்பாக்கிசூடு : எல்லா யூதர்களையும் கொல்லவிரும்பிய தாக்குதல்தாரி
அமெரிக்க பிட்ஸ்பர்க் யூத வழிபாட்டு மையத்தில் புகுந்து 11 பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரி பிடிபட்டவுடன், தாம் அங்கிருந்த எல்லா யூதர்களையும் கொல்ல விரும்பியதாக அலுவலர்களிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் பெயர்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் 97 வயது பெண்மணி ஒருவரும், ஒரு கணவன் மனைவியும் அடக்கம்.
சனிக்கிழமை நடந்த இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைத் தவிர, நான்கு பெண் போலீசார் உள்பட ஆறு பேர் காயமடைந்தனர்.