திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 அக்டோபர் 2018 (12:59 IST)

4 வயது சிறுமியின் முகத்தை பிராண்டிய சிங்கம்; அதிர்ச்சி வீடியோ

ரஷ்யாவில் சர்க்கஸ் ஒன்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் முகத்தில் சிங்கம் பிராண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தெற்கு ரஷ்யாவில் நடைபெற்ற சர்க்கஸை பார்ப்பதற்காக ஜோடியினர் தங்களது நான்கு வயது பெண் குழந்தையுடன் சென்றுள்ளனர்.
 
சர்க்கஸில் பெண் சிங்கம் ஒன்றின் பயிற்சியாளர் அதனை வைத்து வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். அதனை அந்த 4 வயது சிறுமி கூண்டிற்கு அருகில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.
 
திடீரென அந்த பெண் சிங்கம் வேகமாக ஓடி அந்த சிறிமியின் முகத்தில் பிராண்டிவிட்டது. காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது.