1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 7.96 positive cases in worldwide

ஒரே நாளில் 645,626 பேருக்கு கொரோனா: உலகம் முழுவதும் பரபரப்பு!

உலகம்
உலகம் முழுவதும் ஒரே நாளில் 645,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் இதுவரை 7,96,94,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 5,61,09,175 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், கொரோனாவிற்கு 17,48,236 பேர் மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் 11,503 பேர் மரணம் என்பதும் இன்று ஒரே நாளில் உலகம் முழுவதும் மொத்தம் பேர் 17,48,236 பேர் மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,632 பேர் கொரோனாவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 768 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது
 
அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 175,402 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அமெரிக்காவில் 1,90,93,698 பேராக உயர்வு என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் கொரோனாவில் இருந்து 1,12,14,452 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 7,54,2,383 பேர் அமெரிக்காவில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
முதல் நாள் முதல் கட்சியில் இருந்த பொதுச்செயலாளர் பாஜகவுக்கு ஓட்டம்: கமல் அதிர்ச்சி