வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: வெள்ளி, 25 டிசம்பர் 2020 (00:25 IST)

தமிழ் ஆட்சி மொழி வார விழா!

கருவூர் தமிழ் அமைப்புகள் 26ம் தேதி கொண்டாடுகிறது! தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள், அமைப்புகள் ஆர்வலர்கள் கலந்து கொள்ள அழைப்பு!

கருவூர் திருக்குறள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச் செம்மல் விருதாளருமான மேலை பழநியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தமிழ்ச் சட்ட வார விழா கொண்டாட்ட அறிவிப்பின்படிகருவூர் திருக்குறள் பேரவை ஏற்ப்பாட்டில் குளித்தலை தமிழ்ப் பேரவை, பள்ளபட்டி தனித் தமிழ் இயக்கம், கருவூர் தமிழுறவுப் பெருமன்றம் தமிழ்ச் சங்கம், திருக்குறள் பேரவை , உலகத் திருக்குறள் கூட்டமைப்பு கருவூர் மாவட்ட பேனா நண்பர் பேரவை இணைந்து 26.12.2020 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கருவூர் வட்டாச்சியர் அலுவலகம் முன் அமைந்துள்ள சங்ககாலப் புலவர்கள் நினைவுத் தூண் அருகே கூடி தூணிற்கு மாலை அணிவித்து தமிழ் போற்றும் தமிழ் வழி பின்பற்றும் முழக்கமிட்டு உறுதி மொழியேற்றுமுனைவர் கடவூர் மணிமாறன், முனைவர் கருவூர் கன்னல், பாவலர் ப .எழில்வாணன், தென்னிலை கோவிந்தன் நன்செய் புகழூர் அழகரசன் உரையாற்ற கடைவீதியில் தமிழில் பெயர்ப் பலகை இடம் பெற வலியுறுத்தி பரப்புரை செய்து கருவூர் மாவட்ட பேனா நண்பர் பேரவை கிளை மரு.திருமூர்த்தி நன்றியுரை ஆற்ற உள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர் மேலை பழநியப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.