செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (18:13 IST)

மீண்டும் சிக்கலில் துப்பறிவாளன் 2 – குழப்பத்தில் விஷால்!

விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடக்க இருந்த நிலையில் இப்போது அங்கு கொரோனா வேகமாக பரவி வருவதால் சிக்கல் எழுந்துள்ளது.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது லண்டனில் மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம் என விஷால் தரப்பு தயாரானது. ஆனால் அங்கு இப்போது கொரோனா பரவும் வேகம் மீண்டும் அதிகமான நிலையில் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் எல்லாம் முடக்கப்பட்டு விட்டதால் அங்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.