துருக்கி பூகம்பம்.. 4000 பேர் பலி, பனியால் மீட்புப்பணிகள் தாமதம்..!
நேற்று அதிகாலை துருக்கியில் நிகழ்ந்த பூகம்பம் காரணமாக சுமார் 4000 பேர் பலியாகி உள்ளதாகவும் ஆயிரக்கணக்கான பேருக்கு படுங்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிரியா மற்றும் துருக்கி ஆகிய இரண்டு நாடுகளில் நேற்று அடுத்தடுத்து மூன்று பூகம்பங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பூகம்பத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ நெருங்கியதாகவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மீட்ப பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்காக 7 நாட்கள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. நேற்று நிகழ்ந்த பூகம்பம் துருக்கியின் அண்டை நாடுகளான ஈராக் எகிப்து உள்பட ஒரு சில நாடுகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் ஆனால் அந்த நாடுகளில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா மீட்பு பணிவுக்காக இரண்டு குழுக்களை அனுப்பி உள்ளதாகவும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
Edited by Siva