1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified திங்கள், 6 பிப்ரவரி 2023 (16:54 IST)

துருக்கி-சிரியா நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டலாம் என அமெரிக்கா தகவல்!

turkey
துருக்கி-சிரியா நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டலாம் என அமெரிக்கா தகவல்!
துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பத்தாயிரம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று அதிகாலை துருக்கி மற்றும் சிரியா எல்லையில் பயங்கர நிலநடக்கம் ஏற்பட்டதை அடுத்து இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சற்று முன் இரண்டாவது முறையாக மீண்டும் நில நடக்கும் ஏற்பட்டுள்ளதை அடுத்து பல கட்டிடங்கள் குலுங்கி தரைமட்டமாகி இருப்பதாகவும் இந்த இடிபாடுகளில் ஏராளமான சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இதுவரை 1300க்கும் அதிகமானோர் உயிர் இழந்ததாக கூறப்பட்டிருக்கும் நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 பேரை எட்டும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஒரு பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது இரண்டு சதவீதமாக இருக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran