தொடர்புடைய செய்திகள்
- நடித்து மக்களை ஏமாற்றிய நாய்... வைரலாகும் வீடியோ
- தாய்லாந்து அரசரின் 4வது மனைவியின் புகைப்படம் வெளியீடு : வைரல் தகவல்
- கேரள சிறுமியின் மனிதநேயமிக்க செய்த செயல் – குவியும் லைக்ஸ் !
- நெடுஞ்சாலையில் யானை செய்த காரியம்.. வைரல் புகைப்படம்
- ”கருத்து சுதந்திரம் வேண்டும்”..வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி, திடீர் ராஜினாமா..
தாய்லாந்தின் தென்பகுதியில் வெள்ளம் – 32 பேர் பலி !
தாய்லாந்தின் தென் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் மழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் தென் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடுமையான மழைப் பெய்து வருகிறது. அதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 32 பேர் வரைப் பலியாகியுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியியிட்டுள்ளன.
மேலும் சாலைகள், பாலங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் 20,000 பேருக்கு மேலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடுமையான வெள்ளத்தால் மின்வெட்டு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகள் மிக வேகமாக நடைபெறுவதாக அந்நாட்டு அரசு அறிவிக்க முகாம்களில் உள்ள மக்களுக்கு ஒழுங்காக உணவு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
