நடித்து மக்களை ஏமாற்றிய நாய்... வைரலாகும் வீடியோ

dog
Last Modified சனி, 31 ஆகஸ்ட் 2019 (17:51 IST)
தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கில் ஒரு நாய் நடித்து மக்களை ஏமாற்றி உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது.
தாய்லாந்து நாட்டில்  பாங்காக்கில் உள்ள கேனி தெரிவில் ஒருநாய், தனது கால்கள் ஒடிந்ததுபோன்று வைத்துக்கொண்டு மக்களிடம் இருந்து உணவுகளைப் பெற்று சாப்பிட்டு வந்துள்ளது.
 
அதாவது இயல்பாக இருப்பதைவிட, சற்று உடல்ரீதியாக மாற்றுத்திறத்துடன் இருந்தால் மக்கள் எல்லோருக்கும் அந்த உயிரினம் மீது அக்கறை எழுவது வாடிக்கை. இந்நிலையில் பாங்காக் தெருவில் ஒருநாய் தன் கலை உடைந்தது போல் வைத்துக்கொண்டு வருவோர் போவோரிடம் நடித்துக்காட்டி அவர்களுடம்  உணவைப் பெற்றுவருகிறது.
 
இந்த நாய் நடிப்பதைப் பார்த்த ஒருவர் இதை வீடியோவாக எடுத்துபதிவிட தற்பொழுது இது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :