தாய்லாந்து அரசரின் 4வது மனைவியின் புகைப்படம் வெளியீடு : வைரல் தகவல்

thailand
Last Updated: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (20:38 IST)
தாய்லாந்து அரசரின் 4வது மனைவியின் புகைப்படங்களை அந்த நாட்டு  அரண்மனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இது வைரல் ஆகிவருகின்றது.
தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலாங்கோர்ன், தனது 66 ஆம் வயதில் அந்த நாட்டு மன்னராக பொருப்பேற்றுக்கொண்டார்.  அதன்பின்னர் தனது மெய்க்காப்பாளராக இருந்த சுதீடா டிட்ஜெய் என்ற பெண்ணை தனது 4 வது மனைவியாகத் திருமணம் செய்துகொண்டார்.
 
கடந்த ஜூலை மாதம் மன்னரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது, ராணுவ செவிலியராகப் பணியாற்றிய சினீனத் வோங்வாஜிரபக்தி ( 36) என்ற பெண்ணுக்கு சாவ் குன் ஃபர என்ற பட்டம் கொடுத்து மன்னர் தன் அரச குடும்பத்தின் மரியாதையை வழங்கினார்.
 
இந்நிலையின் சினீனத் வோங்வாஜிரபக்தியின் 60 புகைப்படங்களை தாய்லாந்து அரண்மனை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :