திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By VM
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (08:04 IST)

ஆஸ்கர் விருது பட இயக்குனர் கிரிஸ்டோபர் நோலனின் அடுத்த படம் குறித்து முக்கிய அப்டேட்

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலனின் புதிய படம் வரும் 2020ம் ஆண்டு ஜுலை மாதம் 17ம் தேதி வெளியாகும என வார்னல் ப்ரோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 
இன்றைய இளைஞர்களிடம் ஹாலிவுட் இயக்குனர் ஒருவரின் பெயரை சொல்லுங்கள் என கேட்டால் யோசிக்காமல் சொல்வார்கள் கிரிஸ்டோபர் நோலன் பெயரை. 
 
ஏனெனில் அறிவியல் கலந்து தனது கற்பனையை செதுக்கி ஒவ்வொரு படத்தையும் வழங்கியுள்ளார். இவர் 1998ம் ஆண்டு ‘ஃபாலோயிங் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். பின்னர் இரண்டாவது படமான ‘மெமண்டோ’  மூலம் உலக முழுவதும் ரசிகர்களால் பாராட்டு பெற்றார். அடுத்து  ‘த டார்க் நைட்’ வரிசைப் படங்கள், ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர் ஸ்டெல்லார்’ எனத் தொடர்ந்து இவர் இயக்கிய படங்கள் எல்லாமே வசூலில் டாப் ஹிட்டாகின.
 
இவர் இயக்கிய 10வது படமான 'டன்கிர்க்'  கடந்த 2017ம் ஆண்டு வெளியானது.  உலகம் முழுவதும் வசூல் மழை பொழிந்தது. இந்தியாவிலும்  'டன்கிர்க்' வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் சேர்த்து 3 ஆயிரத்து 735 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. 
 
இது மட்டுமின்றி 2018ம் ஆண்டு, சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங் ஆகிய மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது. மேலும் சிறந்த இயக்குனர், சிறந்த தயாரிப்பு, சிறந்த  ஒளிப்பதிவு, சிறந்த படம், சிறந்த  இசை ஆகியவற்றுக்கான ஆஸ்கர் நாமினி பட்டியலிலும் டன்கிரிக் இடம்பெற்றது.
 
இந்நிலையில் கிரிஸ்டோபர் நோலன் அடுத்ததாக இயக்க உள்ள படங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் போஸ், இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்க உள்ள படம் வரும் 2020ம் ஆண்டு ஜுலை 17ம் தேதி வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..ஏதோ ஒரு நிகழ்வை மையப்படுத்தியே படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறத. மேற்படி படம் குறித்து  தகவலை ரகசியமாக  பட தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளது.