வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 17 டிசம்பர் 2018 (20:54 IST)

எல்லாமே இப்படியே அமையுதே... புரோக்கர் ஆன விமல்

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருந்தார். 
 
இந்த படத்தில் ஆஷ்னா சவேரி நடிக்கிறார். ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடித்தார். இப்படம் முழுவதும் டபுள் மீனிங் கொண்டதாக உருவாகி இருந்தது. 
 
இளசுகளின் வட்டாரத்தில் இந்த பட நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தை தொடர்ந்து விமல் அடுத்த அடத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு தி புரோக்கர் என பெயரிட்டுள்ளனர். 
 
தமிழன், பைசா, டார்ச்லைட் ஆகிய படங்களை இயக்கிய மஜீத் இந்த படத்தை இயக்குகிறார். விமல், யோகிபாபு, டயானா சாம்பிகா, எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, வினோத், தம்பி ராமய்யா, மயில்சாமி நடிக்கின்றனர். கான்பிடன்ட் பிலிம் கேஃப் இப்படத்தை தயாரிக்கிறது என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.