1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 15 ஜனவரி 2019 (10:12 IST)

சன் பிக்சர்ஸ் அடுத்த படம் குறித்து முக்கிய அறிவிப்பு!

காஞ்சனா 3 படம் குறித்த முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து  வெற்றி பெற்ற படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளிவந்தது. இதில் ராகவா லாரன்ஸ், ராய் லட்சுமி, கோவை சரளா, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

தொடர்ந்து டாப்ஸி, நித்யா மேனன் நடிப்பில் காஞ்சனா-2 திரைப்படமும் வெளியானது. 

தற்போது இந்தப் படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார்.
 

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா , தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.