1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (13:22 IST)

சூர்யாவின் அடுத்த படம் குறித்த அப்டேட்ஸ் இதோ..!

என்.ஜி.கே, காப்பான் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்ஸ் வெளிவந்துள்ளது.


 
நடிகர் சூர்யா காப்பான் படத்திற்கு பிறகு  சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்  இந்த படத்தை  2டி புரொடக்‌ஷனில் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 
 
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது என்ஜிகே படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பிரபலங்கள்  நடித்துவருகின்றனர். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யாவுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் காப்பான் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இறுதிச் சுற்று இயக்குநர் சுதா  கொங்காரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு  இந்தியாவின் சண்டிகர், அமெரிக்கா ஆகிய இடங்களில் மார்ச் மாதம் முதல்  நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.