1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. To make Masala Methi Chapathi...!!

வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி செய்ய...!!

வெந்தயக் கீரை சப்பாத்தி
தேவையான பொருட்கள்: 
வெந்தயக்கீரை - 2 கைப்பிடி 
கோதுமை மாவு - 200 கிராம் 
பெரிய வெங்காயம் - ஒன்று 
பூண்டு - 5 
சீரகம் - அரை டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
 
முதலில் கீரையை அலசி கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, கீரை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 
 
கீரை வெந்ததும், கோதுமை மாவுடன் சேர்த்து கலந்துக்கொள்ளவும். மேலும், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு அளவிற்கு பிசைந்து சுமார் 20 நிமிடங்கள்  விடவும். பின்னர் சிறிய துண்டுகளாக எடுத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு விரித்து, தவாவில் வெண்ணைவிட்டு சுட்டு எடுக்கவும். சுவையான வெந்தயக்கீரை மசாலா  சப்பாத்தி தயார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
முகம் பொலிவு பெற உதவும் தக்காளி ஃபேஸ் பேக்...!!