15 மண்டலங்களில் 15 ஆயிரம் பேருக்கு சிகிச்சை! – சென்னையில் குறைந்தது கொரோனா!
சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருவதை தடுக்க முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வரை மொத்த தமிழகத்தின் பாதிப்பை விட சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் அங்கு முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு தற்போது மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மொத்தமாக 79,662 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 62,552 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,295 பேர் உயிரிழந்த நிலையில் 15,814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 மண்டலங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை இருந்த கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட இது குறைவு ஆகும்.