திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த ஸ்டஃப்டு பிரிஞ்சால் செய்ய...!!

தேவையான பொருட்கள்: 
 
சிறிய கத்திரிக்காய் - கால் கிலோ
இட்லி மிளகாய் பொடி -  50 கிராம்
தனி மிளகாய் தூள் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 50 கிராம்
கடலை மாவு -  50 கிராம்
உப்பு  தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - 100 கிராம்.

செய்முறை: 
 
கத்திரிக்காயை கழுவி காம்பை கொஞ்சம் விட்டு நான்காக அல்லது எட்டாகப் பிளந்துகொள்ளவும். இட்லி மிளகாய் பொடியில் கொஞ்சம் உப்பு சேர்த்து,  நல்லெண்ணெய் விட்டு குழைக்கவும். இதை ஒவ்வொரு கத்தரிக்காயினுள்ளும் நன்றாக அடைக்கவும். 
 
கடலை மாவில் தேவையான அளவு தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்துப் பேஸ்ட்டாகக் குழைக்கவும். அதை கத்தரிக்காயின் பிளந்த பாகங்கள் மூடும்படி தடவிவிடவும். எல்லா கத்திரிக்காய்களையும் இந்த முறையில் தயார் செய்துகொள்ளவும். 
 
சற்றே அகலமான வாணலியை அடுப்பில் வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் ஸ்டஃப் செய்யப்பட்ட கத்திரிக்காய்களை பரவலாக போடவும். நான்கு நிமிடத்தில் திருப்பிப் போடவும். எல்லாபுறமும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிடவும், அடுப்பை சிம்மில் வைத்து எடுக்கவும். சுவை மிகுந்த ஸ்டஃப்டு பிரிஞ்சால்  தயார்.