1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேரட் அல்வா செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
கேரட் - கால் கிலோ 
பால் - கால் லிட்டர் 
சக்கரை - 150 கிராம் 
முந்திரி - 5 
நெய் - 5 டீஸ்பூன் 
வெண்ணெய் - 2 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 

செய்முறை: 
 
கடாய் நன்றாக சூடேறிய பின் அதில் வெண்ணெய் போட்டு உருக்கி கொள்ளவேண்டும். பிறகு துருவிய கேரட்டை அதில் போட்டு 10 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றி நன்றாக வேகவிடவும். 20 நிமிடங்கள் வரை அதனை நன்றாக கொதிக்க விடவும். 

பிறகு அது சுண்டியவுடன் சக்கரை போட்டு நன்றாக கிளறவும். பிறகு நெய் விட்டு மீண்டும் நன்றாக வதக்கவும். கடைசியாக ஏலக்காய் போடி தூவி நன்றாக கிளறவும். 

பிறகு ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து அதில் நெய் ஊற்றி அதில் முந்திரி போட்டு வறுக்கவும். வறுத்த முந்திரியை ஏற்கவனவே நாம் தயார் செய்துள்ள  கேரட் அல்வாவின் மீது கொட்டி கிளறவும். சுவையான கேரட் அல்வா தயார்.