1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சத்தான முள்ளங்கி சப்பாத்தி செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
முள்ளங்கி - 3
மிளகாய் தூள் - 3
மல்லித் தழை - சிறிதளவு நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 சிறிதாக நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு,
கோதுமை மாவு - 2 கப்.

செய்முறை:
 
முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் முள்ளங்கித் துருவல், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும். அடுத்து மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும்.
 
சப்பாத்தி மாவுக்குள் இரண்டு ஸ்பூன் முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி சப்பாத்தியாக இடவும். சத்தான முள்ளங்கி சப்பாத்தி தயார்.