1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (20:11 IST)

சமையல் கேஸ் விலை ரூ.10 குறைப்பு: கடுப்பில் பொதுமக்கள்!

5 மாநில தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சமையல் கியாஸ் விலையை இந்தியன் ஆயில் நிறுவனம் ரூபாய் 10 குறைத்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 
கடந்த 2 மாதங்களில் கிட்டத்தட்ட சமையல் கேஸ் விலை ரூபாய் 200 அதிகரித்தது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி தற்போது மானியமும் சரியாக வருவதில்லை என்றும் அப்படியே வந்தாலும் 20 ரூபாய் 30 ரூபாய் மட்டுமே மானியம் வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் 5 மாநில தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சமையல் கியாஸ் விலை ரூபாய் 10 குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது
 
200 ரூபாய் இரண்டே மாதங்களில் ஏற்றிவிட்டு வெறும் 10 ரூபாய் குறைப்பு ஏன் என்றும் அதற்குக் குறைக்காமலேயே இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கடுப்பில் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச சந்தை விலையைக் கணக்கில் கொண்டு சமையல் கேஸ் விலையை 200க்கு மேல் குறைக்க வேண்டும் என்றும் பத்து ரூபாய் குறைத்து பொது மக்களை ஏமாற்ற முடியாது என்றும் எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்