சுவையான எலுமிச்சை ரசம் செய்ய !!
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரசப் பொடி - 2 ஸ்பூன்
பெரிய தக்காளி - 2
எலுமிச்சம்பழம் - சிறியது 1
தனியா பொடி - 2 ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
மிளகு - கால் ஸ்பூன்
மிளகாய்ப் தூள் - 2 ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
வெல்லம் - சிறிதளவு
செய்முறை:
முதலில் இரண்டு பருப்புகளையும் நன்கு கழுவி, சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் தக்காளிப் பழத்தை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
பின் அதில் உப்பு, தயாரித்து வைத்து இருக்கும் ரசப் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, சிறிதளவு வெல்லம் சேர்த்து கலக்கி நன்கு கொதிக்க விடவும். பின் வேகவைத்த பருப்பை மத்தினால் நன்றாக கடைந்து ரசத்தில் சேர்க்கவும்.
பின்னர் ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து உடன் கொத்தமல்லி, கறிவேப்பில்லை சேர்க்கவும். பின்னர் ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு,ஜீரகம்,பெருங்காயம் .காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
தாளித்த பொருட்களை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான எலுமிச்சை ரசம் தயார்.