திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவையான தக்காளி குழம்பு செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
தக்காளி 1/4 கிலோ
சிறிய வெங்கயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 10
கறிவேப்பிலை 1 கொத்து
எண்ணெய் 4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் 2 1/2 தேக்கரண்டி
 மல்லித் தூள் 1 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல்
கடுகு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை:​
 
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும். உரித்த பழங்களை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காவில் கெட்டியாக பால் எடுத்துக் கொள்ளவும்.
 
பச்சை மிளகாய் மற்றும் சிறிய வெங்காயத்தை அரிந்து வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகை போடவும். கடுகு வெடித்ததும் வெட்டிவைத்த வெங்கயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.
 
வதக்கிய பிறகு தேங்காய் பால் பிசைந்து வைத்த தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூளையும் போட்டுக் கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கழித்து கெட்டி  தேங்காப்பாலை ஊற்றவும். இறுதியாக தேவைக்கேட்ப உப்பு போட்டு எண்ணெய் மிதந்ததும் குழம்பை இறக்கவும். சுவையான தக்காளி குழம்பு தயார்.