திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

தீபாவளி ஸ்பெஷல் ரவா லட்டு செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
ரவை - 2 கப்,
சர்க்கரை - 1 கப்,
துருவிய தேங்காய் - 1/4 கப்,
உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் - தேவையான அளவு
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை:
 
ரவையை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை நன்கு பொடிக்கவும். ரவையை சர்க்கரையுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு முந்திரியை உடைத்து சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும். 
 
பிறகு ரவை, சர்க்கரையை சிறிது லேசாக வறுக்கவும். அதிகம் சூடு செய்யக் கூடாது. உடனே நெய்யை சூடு செய்து இந்த கலவையில் சேர்த்து, தேங்காய்,  ஏலக்காயையும் சேர்க்கவும். கலவை சூடாக இருக்கும் போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும்.