1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவை மிகுந்த வெல்ல அதிரசம் எப்படி செய்வது...?

தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி மாவு - 1/2 கிலோ
வெல்லம் - 1 1/4 கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு 
தண்ணீர் - 1 கப்
நெய் - 2 மேஜைக்கரண்டி
சுக்கு - 1 துண்டு (பொடியாக)
ஏலக்காய் - 6 பொடித்தது
 
மாவு செய்முறை:
 
பச்சரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை நன்கு வடித்து சுத்தமான துணியில் பரப்பி 30 நிமிடம் வரை உலர விடவும். பிறகு மிக்சியில்  அரைத்து கொள்ளவும். சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.

பாகு செய்முறை: 
 
1 கோப்பை நீரை கொதிக்க வைத்து வெல்லம் சேர்க்கவும், வெல்லம் கரைந்ததும் அடுப்பை நுறுத்திவிட்டு, கரைத்த வெல்லம்  சேர்த்து கரைந்து பாகு வந்ததும்,  வடிகட்டி மறுபடியும் அடி கனமான பத்திரத்தில் ஊற்றி 8 லிருந்து 10 நிமிடம் காய்ச்சவும். (கம்பிப்பாகு). பாகு வெந்துகொண்டிருக்கும் போது, ஒரு கோப்பையில் நீர்  எடுத்து ஒர், இரண்டு சொட்டு பாகை விட்டுப்பார்க்கவும். பாகு கரையாமல் அப்படியே இருந்தால் அதாவது தண்ணீரில் பாகு உருட்ட அலவுக்கு வந்தால் அது  சரியான பக்குவம்.
 
பின்னர் தீயைக்குறைத்துக் கொள்ளவும், அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டி தட்டாமல் கிளறவும். நன்கு ஒன்று சேர்ந்ததும் நெய், சுக்கு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்தும் அடுப்பிலிருந்து  இறக்கி, சூடு ஆறியதும் ஒரு வெள்ளைத்துணி போட்டு மூடி வைக்கவும்.
 
அதிரசம் செய்முறை:
 
மறுநாள் வாணலியில் எண்ணெய் காயவைத்து நன்கு சூடானதும், எலுமிச்சை அளவு மாவு எடுத்து உருண்டையாக்கி லேசாகத் தட்டி எண்ணெயில் போடவும், லேசாக சிவந்ததும் திருப்பி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து விடவும். சுட்ட அதிரசத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்காமல் தனித்தனியாக வைக்கவும். ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும். சுவையான வெல்ல அதிரசம் தயார்.