1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. How to make Cashewnut Pakoda...!!

முந்திரி பக்கோடா செய்ய...!

முந்திரி பக்கோடா
தேவையான பொருட்கள்:
 
முந்திரி - 1 கப்
கடலை மாவு - 3/4/ கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட்,  புதினா, கறிவேப்பிலை மற்றும் உப்பு போட்டு, அத்துடன் தண்ணீரை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் முந்திரிப் பருப்பை போட்டு நன்கு கலந்து கொள்ளவேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு  தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி  பக்கோடா தயார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
காதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்!!