புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த சிக்கன் கட்லெட் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
ப்ரெட் தூள் - ஒரு கப்
முட்டை - 2
செய்முறை:
 
முதலில் சிக்கனை மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவைத்து கொள்ளவும். பின் உருளை கிழங்கை தனியாக வேக  வைத்துக் கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை லேசாக வதக்கவும், வெங்காயம் நன்கு வதங்கியதும் வேகவைத்த உருளைக்கிழங்கு  மற்றும் சிக்கனை சேர்த்து கிளறவும். பின்னர் சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும். உப்பு சரி பார்த்து கொள்ளவும். கடைசியில் கொத்தமல்லி இலையை போட்டு இறக்கவும்.
 
இதை ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு இதை சிறிய உருண்டைகளாக எடுத்து கட்லெட் போல் தட்டி வைக்கவும் அதை முட்டையில் நனைத்து பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும். சுவையான சிக்கன் கட்லெட் தயார்.