புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

சுவையான நெத்திலி மீன் குழம்பு செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
நெத்திலி மீன் - 1/2 கிலோ
சிறிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 100 கிராம்
மிளகாய்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
தேங்காய் பால் - அரை டம்ளர்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
செய்முறை: 
 
முதலில் மீனை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும் .பிறகு புளியை  கரைத்து வைக்கவும். பின்பு இஞ்சியை விழுதாக அரைக்கவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சோம்பு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து  நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். 
 
பிறகு மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து தக்காளியை நன்றாக வதங்கிய பின் கரைத்த புளியை ஊற்றவேண்டும். இப்பொழுது  அதில் உப்பு, தேவைப்பட்டால் தேங்காய் பாலை சேர்த்து கொள்ளலாம். பின்னர் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவேண்டும். மீனை சேர்த்த  உடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.