புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாட சமையலில் கடலை எண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்...!!

கடலை எண்ணெய்க்கு இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகம் உள்ளது.
கடலை எண்ணெய்யில் குறைந்த அலவிலேயே உடலுகு தீங்கு விளைவிக்காத குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்து அதிகம் இருக்கின்றன. எனவே கடலை எண்ணெய்யை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் மிகவும் குறைகின்றன.
 
உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து முடிகொட்டல் பிரச்சனையை போக்கி தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் பெற உதவுகிறது.
 
வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செல்கள்  புத்துணர்ச்சி பெரும். நரம்புகள் பாதிப்பு, ஞாபக மறதி போன்ற குறைபாடுகளும் நீங்கும்.
 
செரிமான திறன் சரிவர இல்லாதவர்கள், வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட காலம் மலச்சிக்கல் பிரச்சனை கொண்டவர்கள்  கடலை எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்த பலனளிக்கும்.
 
கடலை எண்ணெய் சரியான அளவில் பயன்படுத்தும் நபர்களுக்கு, அவர்களின் சருமத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, இளமை  தோற்றம் மேலோங்கும்.
 
உடலில் போலிக் அமிலத்தின் சதவீதம் குறியும் போது ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இது எதிர்காலத்தில் ரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. எனவே கடலை எண்ணெய்யை பயன்படுத்துவதால் அந்த பாதிப்பை தவிர்க்கலாம்.