பொட்டுக்கடலை துவையல் செய்ய வேண்டுமா...?
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
புளி - பாக்கு அளவு
பூண்டுப் பல் - 3
தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டுப் பல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்து வைக்கவும். சுவை மிகுந்த பொட்டுக்கடலை துவையல் தயார்.
குறிப்பு: இதில் தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. எனவே தண்ணீரை தெளித்து அரைக்கவும். கெட்டியாக அரைத்து எடுக்கவும்.