உருளைக்கிழங்கு கட்லெட் செய்ய...!!

Potato Cutlet
Sasikala|
தேவையான பொருள்கள்:
 
உருளைக்கிழங்கு - 3
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
முட்டை - 2
பிரட் துண்டுகள் - 2 அல்லது 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1

செய்முறை:
 
குக்கரில் உருளைக்கிழங்கை வேகவைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பின் தோலுரித்து மசித்து வைக்கவும். பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு வெள்ளைப் பகுதியை மிக்ஸ்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும்.

பிறகு கரம் மசாலா சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து  இறக்கிவிடவும். ஆறியதும் மசாலாவை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி பிரட் தூளில் பிரட்டி தட்டி வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள மாவையும்  இவ்வாறே செய்யவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கட்லெட்களை முட்டை கலவையில் டிப் பண்ணி போடவும். சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான கட்லெட் தயார். தக்காளி சாஸுடன் பரிமாறலாம்.


இதில் மேலும் படிக்கவும் :