1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
  4. How to make Peas Masala...!!

சூப்பரான சுவையில் பீஸ் மசாலா செய்ய...!!

பீஸ் மசாலா
தேவையான பொருள்கள்:
 
பிரஷ் பட்டாணி - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
தனியாத்தூள் - 1 மேஜைக்கரண்டி 
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி 
கொத்தமல்லி தழை - சிறிது 
உப்பு - தேவையான அளவு
 
அரைக்க தேவையான பொருள்கள்:
 
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
முந்திரிப்பருப்பு - 10
கசகசா - 1 தேக்கரண்டி 
 
தாளிக்க தேவையான பொருள்கள்:
 
வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
பட்டை - 1 இன்ச் அளவு 
கிராம்பு - 2

செய்முறை:
 
கசகசாவை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அதோடு முந்திரிப்பருப்பையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும். வெங்காயம், தக்காளி  இரண்டையும் தனித்தனியாக மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பச்சை  வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 
பிறகு அதனுடன் மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு பட்டாணி சேர்த்து கிளறி அதோடு ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 
பட்டாணி நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள கசகசா, முந்திரிப்பருப்பு கலவையை சேர்த்து மசாலா கெட்டியானதும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும். சூப்பரான சுவையான பீஸ் மசாலா தயார். சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
About Writer
Sasikala