வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட் 2020
Written By Arun Prasath
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (13:23 IST)

வருமான வரி யார் யாருக்கு எவ்வளவு?

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வாரி குறைப்பு விகிதங்களை அறிவித்துள்ளார்.
 

அதன் படி ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரியும் இல்லை. அதே போல் ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 30%-ல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.10 லட்சம் முதல் முதல் 12.5 லட்சம் வரை இருந்தால் வருமான வரி 30%-ல் இருந்து 20% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 20%-ல் இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 20%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது மேலும் ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமான உள்ளவர்களுக்கு வரி விகிதம் 30% என்பதில் மாற்றமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போல் வருமான வரி குறைப்பினால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 40,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.