1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (12:25 IST)

பெண் கல்வி குறித்து பேசிய நிதியமைச்சர்: நிர்பயா என கத்திய எதிர்கட்சிகள்!

மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கலின்போது பெண் கல்வி குறித்து பேசுகையில் நிர்பயா என எதிர்கட்சிகள் கத்தியதால் அமளி ஏற்பட்டது.

மத்திய அரசின் 2020 – 2021 ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். விவசாய வளர்ச்சி, ரயில்வே சேவை மேம்பாடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ‘பெண் குழந்தைகளை பெற்றெடுப்போம், படிக்க வைப்போம்” என்ற திட்டம் குறித்து பேசினார்.

பெண் குழந்தைகளை பெற்றெடுப்பதற்கும், அவர்களுக்கு கல்வி அளிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டம் மூலம் பரவலாக பல இடங்களில் பல பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை எட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அப்போது எதிர்கட்சி உறுப்பினர் ‘நிர்பயா’ என கூட்டமாக கத்தியதால் அமளி ஏற்பட்டது. எனினும் அதை கண்டுகொள்ளாமல் நிதியமைச்சர் தொடர்ந்து நிதியறிக்கை வாசித்ததால் சற்று நேரத்தில் அவர்கள் அமைதியானார்கள்