புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (12:47 IST)

அனல்மின் நிலையங்கள் இழுத்து மூடப்படும்! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் மாசுப்பாட்டை குறைக்க பல இடங்களில் அனல்மின் நிலையங்களை மூட உள்ளதாக பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் காற்று பெரும் மாசுபாட்டை சந்தித்துள்ள நிலையில் மாசுபாடுகளை கட்டுக்குள் கொண்டு வர அனல்மின் நிலையங்களை மூட இருப்பதாக பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகை 10 லட்சத்துக்கு அதிகமாக உள்ள நகரங்களில் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த 4 ஆயிரத்து 400 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகமான மாசு ஏற்படுத்தும் அனல்மின் நிலையங்களை மூட அரசு திட்டமிட்டிருப்பதாக அரசு கூறியிருக்கும் நிலையில் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு மாற்று வழி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அனல்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிகளவிலான நிலக்கரி எரிக்கப்படுவதால் காற்றில் கார்பன் புகை அதிகம் கலந்து சுற்றுசூழல் மாசுப்பாட்டை அதிகமாக்குகிறது.

அதேசமயம் நாட்டில் மின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பவையாக அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றை இழுத்து மூட உத்தேசித்திருக்கும் அரசு மாற்று வழியையும் யோசித்திருக்கலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.