புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (13:13 IST)

எல்.ஐ.சி மற்றும் ஐடிபிஐ பங்குகள் தனியாருக்கு விற்கப்படும்! – பட்ஜெட்டில் அறிவிப்பு!

அரசிடம் உள்ள எல்.ஐ.சி மற்றும் ஐடிபிஐ வங்கி பங்குகள் தனியாருக்கு விற்கப்பட உள்ளதாக பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 – 2021 ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளுக்கும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிதியமைச்சர் பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐடிபிஐ வங்கியின் மீது மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகள் அனைத்தையும் விற்க போவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபல காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவைத்தவிர அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்று அதன்மூலம் 2.1 லட்சம் கோடி நிதி திரட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஏர் இந்தியாவின் பங்குகளை 100 சதவீதம் தனியாருக்கு விற்க அரசு முடிவெடுத்த நிலையில் தற்போது மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் திட்டத்திற்கு எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.