1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. The judge ordered to inquire Nirmala Devi in court custody

நிர்மலா தேவியை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

பேராசிரியை
பேராசிரியை நிர்மலா தேவியை 12 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் பல பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளின் செல்போன் எண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கானது தற்பொழுது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவியை ஏப்ரல் 28ஆம் தேதி வரை 12 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி மும்தாஜ் உத்தரவிட்டார். 
அடுத்த கட்டுரையில்
கவர்னரால் கன்னத்தில் தட்டப்பட்ட நிருபருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஸ்டாலின் - கனிமொழி