1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 ஏப்ரல் 2018 (08:42 IST)

ஐபிஎல் போட்டி போல் திரைப்படங்கள் வெளியீடும் நிறுத்தப்படுமா? உதயநிதி கேள்வி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த விட மாட்டோம் என ஒருசில அரசியல் கட்சிகளும், சில இயக்குனர்களும் போர்க்கொடி தூக்கினர். இதனால் சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்
 
இந்த நிலையில் தற்போது திரையுலகினர் பிரச்சனை முடிவடைந்து வரும் வெள்ளி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படும் நிலையில் திரையுலகினர்களுக்கு மூன்றாம் கலைஞர் என்று அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
 
ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..என்று கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை திரையுலக சங்கங்களின் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்