திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (14:07 IST)

நிர்மலா தேவியிடம் மூன்று செல்போன்கள் : பெண்களின் புகைப்படங்கள் : விசாரணையில் அதிர்ச்சி

கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவியின் செல்போனில் பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

 
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 
அதில், அவரிடம் இருந்த 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த செல்போன்களில் பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், பல உயர் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்? யாரிடமெல்லாம் அதிகம் பேசியிருக்கிறார்? அவருக்கு வந்த எஸ்.எம்.எஸ், வாட்ஸ்-அப் தகவல்கள் என அனைத்தையும் சேகரிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
 
நிர்மலா தேவியின் செல்போனில் இருக்கும் பெண்கள், அவரால் சீரழிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளாக இருப்பார்களோ என்கிற அச்சமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.