வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 7 மே 2018 (16:55 IST)

21 வயது அடையாவிட்டாலும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம்; உச்ச நீதிமன்றம்

ஆண் 21 வயதுக்கு முன்பே 18வயது கடந்த பெண்ணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 
கேரளா மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் 21 வயதுக்கு முன்பே துஷாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். துஷாராவுக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டது. இவர்கள் திருமணத்தை எதிர்த்து துஷாராவின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இவர்களது திருமணம் செல்லது என்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நந்தகுமார் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,
 
18 வயதை கடந்த பெண் தனக்கு பிடித்தவருடன் வாழ்வதற்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆணுக்கு 21 வயது நிரம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருவரும் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்வதற்கு உரிமை உள்ளது. 18 வயது நிரம்பிய பெண், 21 வயதைக் கடக்காத ஆணுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதற்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளது.
 
மேலும் கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.