வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 13 பிப்ரவரி 2019 (18:53 IST)

விடியற்காலையிலே கில்மா காட்டவரும் ஓவியா! 90ML லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இதோ!

ஓவியா நடிப்பில் உருவாகிவரும் 90 எம்.எல் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. 


 
தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். 
 
பிக் பாஸ் குயின் ஓவியா களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்.எல் என தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி படு பிஸியாக நடித்துவருகிறார். 
 
இந்நிலையில் தற்போது குளிர் 100 டிகிரி படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் 90 எம்எல் என்ற அடல்ட் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார். இதற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கும் நிலையில் இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் , 90 எம். எல் படம்  வரும் 22ம் தேதி வெளியாக இருக்கிறது என்றும் அன்றைய தினம் அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 
இதை பற்றி ஓவியா கூறியதாவது ,   பிப்ரவரி 22-ம் தேதி 90 எம்.எல் படத்தின் முதல்நாள் முதல் காட்சியில் உங்களை சந்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார். எனவே அந்த திரைப்படம் அன்றைய தினத்தில் வெளியாகிறது என்பதும் அதிகாலையில் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் உறுதியாகி உள்ளது.